Wednesday 29 June 2011

தாம்பத்திய கணக்கு


நான் 27 வயது பெண். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன. நானும், என் கணவரும் ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண் டிருக்கிறோம். எனக்கு வர வர செக்ஸ் மீது ஈடுபாடு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கி யிருக்கிறது. குழந்தைக்காக `தாம்பத்யம்` வைத்துக்கொள்ள வேண்டியது இருப்பதால், நாங்கள் எந்த நாட்களில் செக்ஸ் வைத்துக்கொண்டால் எளிதாக கருத்தரிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதைக் கூறவும்?

பதில்:- நாள் குறித்து வைத்துக்கொண்டு கணவனும்- மனைவியும் தாம்பத்ய உறவில் ஈடுபடுவது நல்லதல்ல. தாம்பத்யம் மிக இனிமையானது. கணவன், மனைவி இடையே அன்பையும், பாசத்தையும், அன்னியோன்யத்தையும் வளர்க்கக்கூடியது. மனதுக்கும், உடலுக்கும் மகிழ்ச்சிதரக்கூடிய இன்பம் நிறைந்த இந்த `உறவை' குழந்தை பெறுவதற்காக மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் அணுகுவது சரியல்ல. குழந்தை பெறுவதற்காக மட்டுமே செக்ஸ் வைத்துக்கொண்டால் உங்களுக்கு மன நெருக்கடிதான் அதிகமாகும்.

மருத்துவ ரீதியாக `கருத்தரிப்புக்கு ஏற்றவை' என்று குறிப்பிடப்படும் சில நாட்கள் இருப்பது உண்மை. அந்த நாட்களில் மட்டும் உறவு வைத்துக்கொள்ளாமல் எல்லா நாட்களிலும் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதும் உண்மை.

ஒரு வாரத்தில் 3 முதல் 4 தடவை உறவு கொள்கிறவர்களில் 51 சதவீதம் பேர் கருத்தரிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். 2 முதல் 3 முறை மட்டுமே உறவு கொண்டால் கருத்தரிப்பு சதவீதம் 46 சதவீதமாகக் குறையும். ஒன்று அல்லது இரண்டு தடவை மட்டும் உறவு கொள்ளும்போது 32 சதவீதமே கருத்தரிக்கும் வாய்ப்பு. வாரத்தில் ஒரு தடவைக்கும் குறைவாக உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு 17 சதவீதமாக குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் வாரத்தில் நான்கு தடவைக்கு மேல் உறவில் ஈடுபடும் பெண்களில் 83 சதவீதம் பேர் கருத்தரிக்கிறார்கள்.

நீங்கள் கருத்தரிப்பிற்கு ஏற்ற காலம் என சில நாட்களை குறித்து வைத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் அது நிர்ப்பந்தம் ஆகிவிடும். அதை கணக்கு பார்த்து செய்யும் கட்டாய வேலை போல் கணவரும் கருதத் தொடங்கிவிடுவார். ஆசைஆசையாய் சந்தோஷ கொண்டாட்டத்துடன் அனுபவித்து மகிழ வேண்டிய பரவச சங்கமத்தை கட்டாய கடமையாக நினைத்தால், மன அழுத்தம் தோன்றி கருத்தரிப்பது தாமதமாகும்.

ஒரு வேளை கருத்தரித்து விட்டாலும், `நாம் தான் தாய் ஆகப் போகிறோமே.. இனியும் ஏன் உடலுறவில் ஈடுபட வேண்டும்` என்ற எண்ணம் உருவாகி, அதுவே உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த ஜென்மத்தையே சுவாரஸ்யமில்லாததாக்கி விடும். அதனால் வாழ்க்கையை தாம்பத்யத்தின் மூலம் ரசியுங்கள். அப்படி ரசிக்கும் வாழ்க்கையின் பரிசாக உங்கள் கர்ப்பம் அமையட்டும். உங்களுக்கு இந்த இளம் வயதிலே செக்ஸ் மீது ஈர்ப்பு இல்லாமல் போக என்ன காரணம் என்று தெரியவில்லை.

கணவருடன் கலந்து பேசி, செக்ஸாலஜிஸ்டை சந்தித்து ஆலோசனை பெற்று வாழ்க்கையை இன்பமாக அமைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment